Tamil Cinema News | சினிமா செய்திகள்
மணிரத்தினம், சிம்பு இணைந்திருக்கும் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் சில முன்னணி நடிகர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த படத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து இயக்க இருக்கிறார்.
இந்த படத்தில் அரவிந்த் சாம, சிம்பு,விஜய் சேதுபதி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூரலிகான், ஜெயா சுதா, அதிதி ராவ் , ஐஸ்வர்யா ராஜேஷ், தீனா மற்றும் மணி என பல முன்னணி நடிகர்கள் நடிகிரார்கள் என அதிகார பூர்வ செய்திகள் வந்துள்ளன இந்த செய்தி வந்ததில் இருந்து ரசிகர்களின் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், ஒளிபதிவு சந்தோஷ் சிவன், படத்தை எடிட் செய்ய இருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத், படத்திற்கு பாடல் வைரமுத்து, இந்த படத்தை பிரமாண்டமாக இயக்குகிறார் மணிரத்தனம் படத்தின் படபிடிப்பு வருகிற பிப்ரவரி 12 ம் தேதி தொடங்க இருக்கிறது.
படத்தின் டைட்டில் “செக்கச்சிவந்த வானம்” என வைத்துள்ளார்கள் இந்த பாடத்தை Madras Talkies – Lyca Productions நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
செக்கச்சிவந்த வானம்#ChekkaChivanthaVaanam is the title of #ManiRatnam's upcoming multi-starrer. #CCV #ManiRatnam @LycaProductions @arrahman @santoshsivan @vairamuthu @thearvindswami #STR #VijaySethupathi @arunvijayno1 @prakashraaj @salamsir21 #Jyotika pic.twitter.com/f4NOiSgzFd
— Cinemapettai (@cinemapettai) February 9, 2018
