நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது. ஒரு ஹீரோவை பிடித்துவிட்டால், விடாமல் அவரையே பிடித்துத் கொண்டிருப்பதும் மணிரத்னத்தின் பாலிஸி! மாதவன், அரவிந்த்சாமி என்று அவரது கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகள் தாண்டி அவர் இயக்கிய படங்களுக்கும் அமோக பாராட்டுகள் உண்டு.

இந்த நிலையில்தான் நடிகர் விக்ரம் தனது மகன் துருவ்வை ஷங்கரோ மணிரத்னமோ அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் காத்துக்கிடக்கிறார். ஆனால் மணியின் பார்வை துருவ் மீதல்ல… மாறாக அதர்வா மீதுதான்!

தற்போது அவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார் அல்லவா? அதற்கு அடுத்த படத்தை இப்பவே தீர்மானித்துவிட்டாராம் மணிரத்னம். அதில்தான் அதர்வா ஹீரோவாக நடிக்கப் போகிறார். முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடிந்துவிட்டன. இனி இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகயில் அதர்வாவின் சம்பளம் தீர்மானிக்கப்படும்.

“இது மணிரத்னம் படம். கொடுக்கறதை வாங்கிக்கிட்டு நடிச்சா உன் எதிர்காலத்துக்கு நல்லது” என்று இப்பவே ஓத ஆரம்பித்திருக்கிறார்களாம் அதர்வாவின் அன்பை பெற்றவர்கள்.