Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொன்னியின் செல்வன் டைட்டில் லுக், டெக்கினிகல் டீம் விவரம் வெளியானது
அமரர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்றூப் புதினமே பொன்னியின் செல்வன். கி.பி.1000 ஆம் ஆண்டு இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இதனை படமாக்கும் முயற்சியில் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்தனர்.
அதிகாரபூர்வமாக பெரிதாக அறிவிப்புகள் இல்லை, ஆனால் தாய்லாந்தில் ஜெயம் ரவி, அசோக் செல்வன், கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லக்க்ஷ்மி ஆகியோருடன் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு பட தலைப்பின் லோகோ வெளியிடுவதாக ட்விட்டரில் அறிவித்தனர் தயாரிப்பு தரப்பு. இப்படத்திற்கு இசை ரஹ்மான், ஒளிப்பதிவு ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். வசனம் ஜெயமோகன், ப்ரொடக்ஷன் டிசைன் தோட்டா தரணி. சண்டைக்க காட்சிங்கள் ஷாம் கௌஷல், நடனம் பிருந்தா, உடை வடிமைப்பு ஏகா லக்கானி. திரைக்கதையை மணிரத்தினதுடன் இணைந்து குமரவேல் ரெடி செய்கிறார்.

பொன்னியின் செல்வன்
எனினும் தமிழில் ரிலீஸ் செய்யவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கும் உள்ளது, உங்களை போல ..
