Tamil Cinema News | சினிமா செய்திகள்
மணிரத்தினம் – பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்திக் நடிக்கப் போகும் பிரம்மாண்ட கதாபாத்திரம்..
Published on

மணிரத்தினம் என்றாலே எதார்த்தம் நிறைந்த ஒரு படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களிடையே இருக்கும். மனிதனின் இயல்பான வாழ்க்கையும் இயற்கையான சூழ்நிலையும் படம் எடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க படம் ஒன்று எடுக்க வேண்டும் என்பது இவரின் கனவாகும். அந்த வகையில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்திற்கு முன்னணி கதாநாயகர்களான விஜய், அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், சூர்யா போன்ற அனைவரிடமும் கால்சீட் கேட்டு கிடைக்கவில்லை.
இதனையடுத்து கார்த்திக் இப்படத்தில் நடிக்க உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை 2.o தயாரித்த லைக்கா நிறுவனம் மீண்டும் களம் இறங்குகிறது. மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் கார்த்திக் வந்தியத்தேவன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
