Tamil Nadu | தமிழ் நாடு
மணிமுத்தாறு அருவியில் ஆர்பரித்து கொட்டும் வெள்ளம்.. கண்கொள்ளா காட்சி
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது அனைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்திருக்கும் மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் தண்ணீர் ஆற்பரித்து கொட்டுகிறது. ஏற்கனவே அருவிக்கு செல்லும் வழியில் சாலை பணிகள் நடப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை . இரவு முழுவதும் மழை பெய்து தற்போதுவிட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகின்றது.
அக்டோபர் 30ம் தேதி காலை நிலவரப்படி 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 3.90அடி உயா்ந்து 54 அடியாகவும் நீா்வரத்து 1803 கன அடியாகவும் காணப்பட்டது.. 136.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அதேபோல் நேற்று காலை நிலவரப்படி 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணை ஒரே நாளில் 6.55 அடி உயா்ந்து 120.20 அடியாக காணப்பட்டது அணையில் நீா்வரத்து 6053.13கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 354.75 கன அடியாகவும் காணப்பட்டது அணைப் பகுதியில்141 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 9 அடி உயா்ந்து 135.17 அடியாக காணப்பட்டது 117 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
85 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணையின் நீா்மட்டம் 5.80அடி உயா்ந்து 79.80 அடியாகவும் நீா்வரத்து 753 கன அடியாகவும், நீா்வெளியேற்றம் 61கன அடியாகவும் காணப்பட்டது 33 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது. 84 அடி நீா்மட்டம் கொண்ட ராமநதி அணையின் நீா்மட்டம் 4 அடி உயா்ந்து 80 அடியாகவும் நீா்வரத்து 192.85கன அடியாகவும் நீா் வெளியேற்றம் 30 கன அடியாகவும் காணப்பட்டது 70 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
