Vijay Tv Manimegalai and Priyanka: கடந்த ஒரு வாரமாக பிரியங்கா மற்றும் மணிமேகலையின் பஞ்சாயத்து தான் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இதில் மணிமேகலை, இனி என்னால் குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக தொகுத்து வழங்க முடியாது. நான் இதை விட்டுப் போகிறேன் என்று குட் பாய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
இதைத்தொடர்ந்து மணிமேகலை விலகி விட்டாரா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மணிமேகலை அவருடைய யூடியூப் சேனலில் தெள்ளத்தெளிவான ஒரு பேட்டியை கொடுத்திருந்தார். அதில் பிரியங்கா ஒருமை வார்த்தையில் பேசி சுய கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருந்ததால் தன்மானமா? வருமானமா என்று யோசித்து பார்த்தேன்.
பிரியங்காவின் இமேஜை டேமேஜ் பண்ணிய மணிமேகலை
அதில் என்னுடைய தன்மானம் தான் எனக்கு பெருசாகப்பட்டது. அதனால் அதிலிருந்து விலகி விட்டேன் என்று பதில் கொடுத்து இருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் மணிமேகலைக்கு சப்போர்ட்டாக பல கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள்.
அந்த வகையில் பிரியங்கா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படித்தான் ஓவராக அதிகாரம் செய்து ஆட்டம் போட்டார். அதே மாதிரி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிரியங்கா, மணிமேகலை தொகுத்து வழங்குவதில் மூக்கை நுழைந்து தேவையில்லாம விஷயத்தில் கருத்தை கொடுத்ததினால் தான் மணிமேகலைக்கு கோபம் வந்துவிட்டது என்று சொல்லி பிரியங்கா மீது தான் தவறு என்பது போல் பலரும் கூறி வருகிறார்கள்.
ஆனால் இந்நிலையில் சில கருத்துக்களும் மணிமேகலைக்கு எதிராக வந்து கொண்டிருக்கிறது. அதாவது மணிமேகலைக்கு பிரியங்காவின் மீது ஏற்கனவே ஒரு பொறாமை இருக்கிறது. தனக்கு பிறகு வந்த பிரியங்கா தற்போது விஜய் டிவியின் முக்கிய ஆளாக வளர்ந்து விட்டார். தற்போது நம்முடைய வேலையிலும் அவ்வப்போது குறுக்கிடும் விதமாக கருத்துக்களை சொல்வதால் மணிமேகலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதனால் தான் ஒரு சின்ன விஷயத்தை பெருசாக பேசி பிரியங்காவின் இமேஜை டேமேஜ் பண்ணும் விதமாக மணிமேகலை இந்த மாதிரி காரியங்களை செய்திருக்கிறார் என்று பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி இவ்வளவு விஷயத்தையும் பக்காவாக செய்த மணிமேகலை கொஞ்ச நாளைக்கு முன்னாடி youtube சேனலில் கொடுத்த பேட்டியை மறந்து விட்டார்.
அந்த வகையில் மண்ட மேல இருந்து கொண்டே மறந்துவிட்டு இவ்வளவு தூரம் இந்த பிரச்சினையை வளர்த்து விட்டுட்டீங்களே மணிமேகலை என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அதாவது அந்த பேட்டியில் எப்போதுமே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது ஒரு தொகுப்பாளனியாக இருந்தால் தான் சிறப்பாக இருக்கும். இல்லையென்றால் இரண்டு பேர் தொகுத்து வழங்கி வந்தால் அவர்களுக்குள்ளே போட்டி பொறாமை ஏற்பட்டு நீயா நானா என்று சொல்லும் அளவிற்கு பொறாமை வளர்ந்து விடும்.
அதிலும் அங்கே இரண்டு பெண் தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள் என்றால் பொறாமைக்கு பஞ்சமே இருக்காது. ஏனென்றால் நம்முடன் இருக்கும் தொகுப்பாளனியை விட நாம் ஒரு படி நம்மளை உயர்த்தி காட்டி, பேசினால் மட்டும்தான் நம்மளால் அங்கு நிலைத்து நிற்க முடியும். அதனால் இது மிகப்பெரிய தலைவலி பிடிச்ச ஒரு விஷயம் என்று யூட்யூபில் பதிவிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி இதுதான் மணிமேகலையின் ஒரிஜினல் கேரக்டர். இவரை விட பிரியங்கா வளர்ந்து வந்திருப்பது தாங்கிக் கொள்ள முடியவில்லை. பிரியங்கா மேல சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் அதை ஊதி பெரிதாகும் விதமாக மொத்தத்தையும் கெடுத்து விட்டார் மணிமேகலை என்று தற்போது மணிமேகலைக்கு எதிராக சில கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது.
கடைசியில் பிரியங்கா மீது இருக்கும் பொறாமையில்தான் மணிமேகலை இந்த மாதிரியான ஒரு பழி போட்டு டிராமா பண்ணுகிறார் என்றும் சில எதிர்மறையான கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
- மணிமேகலைக்கு பயம், விஜய் டிவி தான் அவளை வெளிய போக சொன்னது
- பிரியங்காவா, மணிமேகலையா
- CWC 5 டைட்டில் வின்னர் யார் தெரியுமா