பிரியங்கா மனசு வச்சா தான் விஜய் டிவியில் இருக்க முடியும்.. CWC5-ல் மிரட்டப்பட்ட மணிமேகலை?

VJ Manimeghalai: மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அதுவும் தொகுப்பாளினி பிரியங்காவால் தான் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன் என பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.

இதுவரை எந்த ஒரு சேனலிலும் நடக்காத விஷயம். இது அதுவும் பிரியங்காவை பொருத்தவரைக்கும் விஜய் டிவியில் ஆணிவேராக இருப்பவர். தன்னுடைய வேலையை செய்ய விடாமல் ஆதிக்கம் செலுத்துகிறார் என மணிமேகலை புகார் அளித்திருக்கிறார்.

CWC5-ல் மிரட்டப்பட்ட மணிமேகலை?

அது மட்டும் இல்லாமல் மணிமேகலை வெளியிட்டிருக்கும் வீடியோவில் அவர் பேசி இருக்கும் விஷயம் பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே தென் இந்திய சினிமாவை சமீப காலமாக மீ டு புகார்கள் துரத்தி அடித்துக் கொண்டிருக்கின்றன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சின்ன திரையில் ஒரு தொகுப்பாளனி மனசு வைத்தால் தான் அடுத்தடுத்து வாய்ப்பு மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று வெளியாகி இருக்கும் செய்தி அதிர்ச்சியாக தான் இருக்கிறது. மணிமேகலை ஆரம்பத்தில் பிரியங்கா செய்வது பிடிக்காமல் குக் வித் கோமாளி சீசன் 5 இடம் பேசி இருக்கிறார்.

இருந்தாலும் பிரியங்காவின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாததால் மீண்டும் அதை புகாராக தெரிவித்திருக்கிறார். அதன் பின்னர் மணிமேகலை மற்றும் பிரியங்கா காம்போவில் எந்த சீன்களும் இல்லாமல் இருந்திருக்கிறது.

அப்படி இருந்தாலும் ப்ரொடக்சன் தரப்பிடமிருந்து பிரியங்கா என்ன வேணாலும் பேசிவிட்டு போகிறார் நீங்கள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என முதலில் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அவரிடம் கொஞ்சம் பணிந்து போனால் தான் விஜய் டிவியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் உங்களுக்கு கிடைக்கும்.

அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் தற்போது அவர் செய்யும் விஷயங்களுக்கு சைலன்டாக இருங்கள் என மறைமுகமாக மிரட்டி இருக்கிறார்கள்.

ஆனால் மணிமேகலை தன்னுடைய நிலைப்பாடில் இருந்து மாறாமல் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருக்கிறார். பணம் சம்பாதிப்பதை விட எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என மணிமேகலை சொல்லி இருக்க விஷயம் தற்போது எல்லோரிடமும் பாராட்டைப் பெற்று இருக்கிறது.

பிரியங்கா மனசு வச்சா தான் விஜய் டிவியில் இருக்க முடியும்

- Advertisement -spot_img

Trending News