பிரியங்காவின் நரி தந்திரத்தால் கண்ணீருடன் வெளியேறிய மணிமேகலை.. குக் வித் கோமாளியில் நடந்த அநியாயம்

Cook With Comali 5: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலேயே குக் வித் கோமாளி சீசன் தான் மன அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு மக்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பெயர் வாங்கி இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு துவங்கிய சீசன் 5 ஆரம்பமே ஆட்டம் கழண்டு போச்சு என்று சொல்வதற்கு ஏற்ப ஜட்ஜ் ஆக வந்த வெங்கட் பட் மற்றும் சில போட்டியாளர்கள் இதிலிருந்து விலகி விட்டார்கள். அதற்கு காரணம் இதுவரை சீசன் 1 முதல் 4 வரை தயாரிப்பாளராக மீடியா மேசன் தயாரித்து வந்தது.

ஆனால் இவர்களுக்கும் விஜய் டிவிக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து சன் டிவியுடன் டாப்புக்கு டூப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை ரக்சன் மற்றும் மணிமேகலை எடுத்து நடத்தி வருகிறார்கள். இதில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் என்று வழக்கமாக இருந்தாலும் இதுவரை இருந்த சீசன் போல் இல்லை என்று பலரும் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பதை குறைத்துக் கொண்டார்கள்.

சுயமரியாதைக்காக போராடிய மணிமேகலை

manimehalai tweet
manimehalai tweet

அதற்கு காரணம் எதார்த்தத்தையும் தாண்டி பிரியங்கா மற்றும் இர்ஃபானின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதிலும் பிரியங்காவுக்கு நம்மளால்தான் இந்த விஜய் டிவி சேனலை இருக்கிறது. நாம்தான் இங்கே பெருசு எல்லாம் என்று சொல்வதற்கு ஏற்ப ஓவராக ஆட்டம் போட்டார். அதனால் மணிமேகலை தொகுத்து வழங்கும் விஷயத்தில் மூக்கை நுழைத்து பல இடங்களில் ஒரு தொகுப்பாளனியாக அடாவடித்தனத்தை காட்டினார்.

இதனால் பாதிக்கப்பட்ட மணிமேகலை பலமுறை சீசன் 5 நிகழ்ச்சியை தயாரித்து வழங்கும் டீமிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் சரியாக கிடைக்காததால் நேரடியாக பிரியங்காவிடம் நீங்கள் இப்பொழுது ஒரு போட்டியாளராக வந்திருக்கிறீர்கள் உங்களுடைய வேலையை மட்டும் சரியாக பாருங்கள். தொகுப்பாளினியான எண் விசயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்.

இந்த நிகழ்ச்சி பொறுத்தவரை நான் தான் தொகுத்து வழங்குகிறேன் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத பிரியங்கா, எனக்கு உன்னை விட அனுபவம் ஜாஸ்தி எல்லாம் எனக்கு தெரியும். என்னை மீறி எதுவும் நடக்காது என்று ஒரு தெனாவட்டுடன் தொடர்ந்து மணிமேகலைக்கு குடைச்சல் கொடுத்து இருக்கிறார்.

நான் தான் பெரிய ஆளு என அராஜகம் பண்ணும் பிரியங்கா

இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத மணிமேகலை பொங்க ஆரம்பித்து விட்டார். அதாவது செமி பைனல் நிகழ்ச்சி நடக்கும் பொழுது மணிமேகலை பேசும் பொழுது அதில் பிரியங்கா தேவையில்லாமல் பேசி மணிமேகலையின் சுயமரியாதையை பங்கப்படுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிமேகலை பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார்.

பிறகு மணிமேகலை தொடர்ந்து இந்த சோவை என்னால் நடத்த முடியாது. நான் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று பிரியங்கா செய்த விஷயங்களை சேனல் இடம் சொல்லி இருக்கிறார். ஆனால் சேனல் தரப்பில் இருந்தும் சரி பிரியங்காவும் சொன்னது என்னவென்றால் கிடைத்த வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டு போனால் அடுத்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்காது. அத்துடன் இதனால் உங்களுடைய கேரியரும் பாதிக்கப்படுவதற்கு மிகப்பெரிய சந்தர்ப்பமாக அமைந்து விடும்.

அத்துடன் பிரியங்கா உங்களை விட அனுபவசாலி, அதனால் அவர்களை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள தான் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். இதைக் கேட்ட மணிமேகலை அது என்னால் முடியாது எனக்கு சுயமரியாதை என்பது ரொம்பவும் முக்கியம். அதை விட்டுவிட்டு பணத்துக்காகவும், புகழுக்காகவும் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தால் சாப்பிடற சாப்பாடு நிம்மதியாக ஜீரணம் ஆகாது என்று சொல்லி கண்ணீருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்.

விஜய் டிவியை தூக்கி எறிந்த மணிமேகலை

எதனால் மணிமேகலை பாதியிலேயே காணும் என்று மக்கள் தொடர்ந்து கேள்வி கேட்ட நிலையில் மணிமேகலை இதற்கு விளக்கம் சொல்லும் விதமாக அவருடைய யூடியூப் சேனலில் தெள்ளத் தெளிவாக பதில் அளித்து இருக்கிறார். அதாவது என்னுடைய வேலையை தடுத்து நான் தான் இங்கே பெரிய ஆளு. நான் சொல்வதைக் கேட்டு எல்லோரும் நடக்க வேண்டும். எனக்கு மரியாதையும் மதிப்பையும் கொடுக்க தான் செய்யணும் என்று ஆணவத்துடன் தெரியும் பெண் தொகுப்பாளனுக்கு நான் என்னைக்கு அடிபணிய மாட்டேன்.

அவர்கள் வேலை எதுவும் அதை மட்டும் தான் செய்திருக்கணும், அதை விட்டுவிட்டு ஏன் விஷயத்தில் தலையிட்டு என் சுய கௌரவத்துக்கு இடைஞ்சல் கொடுத்தால் தொடர்ந்து அங்கே என்னால் வேலை பார்க்க முடியாது. அதனால் அந்த நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறி விட்டேன். இனிமேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன்.

Youtube சேனலில் பெண் தொகுப்பாளினி முகத்திரையை கிழித்தெடுத்த மணிமேகலை

இதுவரை சீசன் 1 முதல் 4 வரை நான் பணியாற்றிய தயாரிப்பாளர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சல்யூட். அவர்கள் இருக்க போய் தான் என்னால் என்னுடைய கேரியரை உயர்த்திக் கொள்ள முடிந்தது. எந்த அளவிற்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் இருக்கணும் என்பதற்கு அவர்கள் மட்டுமே உதாரணம். என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி தொடர்ந்து உங்களுடைய ஆதரவு வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் மணிமேகலை மற்றும் பிரியங்காவிற்கு இடையில் நடந்த வாக்குவாதம் காரணமாக மிகப்பெரிய அநியாயம் நடந்திருக்கிறது. இந்த பிரியங்காவிற்கு எல்லா நிகழ்ச்சியும் நரி தந்திரத்தை பயன்படுத்தி ஒவ்வொருவருடைய கேரியரையும் காலி பண்ணுவதே வேலையாகி விட்டது. அப்படித்தான் பிரியங்கா வந்த பிறகு பாவனா, டிடி, ஜாக்குலின் மற்றும் சில தொகுப்பாளினிகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

இந்த பிரியங்காவுக்கு என்னமோ மனசுல நம்மளால தான் விஜய் டிவியை இருக்குது என்ற நினைப்பு. அதனால மற்றவர்களை காலி செய்து வருகிறார் என்று மக்கள் பிரியங்கா மீது கோபத்தை காட்டி வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News