ஆண்களால் கொண்டாடப்படும் குடும்பஸ்தன்.. ஓடிடியில் செய்த தரமான சாதனை

kudumbasthan
kudumbasthan

Kudumbasthan: ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் ஜனவரி 24ல் வெளிவந்த குடும்பஸ்தன் தியேட்டர்களில் சக்கை போடு போட்டது.

தொடர்ந்து வந்த பாசிட்டிவ் விமர்சனங்களும் படத்தின் வசூலுக்கு பிளஸ் ஆக அமைந்தது. அதன்படி குடும்பஸ்தன் 35 கோடி வரை வசூலித்து கெத்து காட்டி இருக்கிறது.

அதையடுத்து ஓடிடியில் படம் எப்போது வரும் என ஆடியன்ஸ் காத்திருந்தனர். அதன்படி கடந்த 7ம் தேதி இப்படம் ஜீ5 தளத்தில் வெளியானது.

இதற்காகவே காத்திருந்த ரசிகர்கள் தங்கள் ஆதரவை அள்ளி கொடுத்துள்ளனர். அதன்படி படம் வெளியான 4 நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ஓடிடியில் செய்த தரமான சாதனை

இதை ஜீ5 நிறுவனம் அதிகாரமாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் படத்திற்கு பெண்களை விட ஆண்கள் கொடுத்த ஆதரவு தான்.

தரையில நடக்கிறது எல்லாம் திரையில வருது. என்னோட சொந்த வாழ்க்கையை பார்க்கிற மாதிரியே இருக்கே என்பது படத்தை பார்த்த இளைஞர்களின் எண்ணம்.

அதுவே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இப்படி முரட்டு சிங்கிளாக இருக்கும் மணிகண்டன் குடும்பஸ்தன்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement Amazon Prime Banner