மாஸ் ஹீரோக்களை வைத்து மணிரத்தினம் வெற்றி கண்ட 5 படங்கள்.. இன்று வரை பெயர் சொல்லும் தளபதி

படத்திற்கு நல்ல கதை மட்டும் இருந்தால் போதாது. அக்கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை வைத்து படத்தை முழுமை பெற செய்வது இயக்குனர்கள் தான். அவ்வாறு தான் அறிந்த நுணுக்கங்களைக் கொண்டு வெற்றி படங்களை கொடுப்பவர் தான் மணிரத்னம்.

மணிரத்னம் படம் என்றாலே அவை புரியாத புதிராக தான் இருக்கும். அவ்வாறு படம் பார்க்க வருபவர்களை, யோசிக்க வைக்கும் விதமாக இவர் எடுக்கும் படங்கள் நல்ல விமர்சனங்களை கொண்டு வெற்றி பெற்று விடுகிறது. மாஸ் ஹீரோக்களை வைத்து இவர் வெற்றி கண்ட 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: வில்லனாய், ரஜினியை குடைச்சல் கொடுத்த நடிகர்.. பொறாமை பட வைத்த நாசர்

கமல்- நாயகன்: 1987ல் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்ற படம் தான் நாயகன். இதில் கமல், நாசர், சரண்யா, ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அக்காலத்தில் வெளிவந்த கேங்ஸ்டார் படமாக இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 175 நாள் திரையில் ஓடிய பெருமையை பெற்றது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்றுத் தந்தது. அதிலும் குறிப்பாக நாயகனாக இடம்பெறும் கமலின் நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும்.

ரஜினி- தளபதி: 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இப்படத்தில் ரஜினி அம்மா பாசத்திற்கு ஏங்குவது போன்ற நடிப்பில் அசத்திருப்பார். மேலும் ரஜினி மற்றும் மணிரத்னம் காம்பினேஷனில் இப்படம் கமர்சியல் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தளபதியாய் இடம் பெற்ற ரஜினியின் கதாபாத்திரம் மக்களை பெரிதும் பேச வைத்தது.

Also Read: அரசியல் ஆசையால் சினிமாவில் பேரை தொலைத்த 4 நடிகர்கள்.. ரீ என்ட்ரி கொடுக்கும் சரத்குமார்

கார்த்திக்- மௌன ராகம்: 1986ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படத்தில் கார்த்திக், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். இப்படத்தில் மனோகர் கதாபாத்திரத்தில் கார்த்திக் நடித்திருப்பார். மேலும் ரேவதியிடம் காதலை வெளிப்படுத்தும் மனோகர் ரோலில் கார்த்திக் சிறப்புற நடித்திருப்பார். இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது.

முரளி- பகல் நிலவு: 1985ல் மணிரத்னம் இயக்கத்தில் முரளி, ரேவதி, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் முரளி நடித்திருப்பார். அக்காலத்தில் கேங்ஸ்டர் படமாக இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் முரளிக்கு இப்படம் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

Also Read: முழு அனுபவத்தால் ரஜினி ரிஜெக்ட் செய்த 4 இயக்குனர்கள்.. கமலுக்கு வாரி இறைச்ச சூப்பர் ஹிட் படம்

விஜயகாந்த்- சத்ரியன்: 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் விஜயகாந்த், பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படம் க்ரைம் சம்பந்தமான படமாகும். இப்படத்தில் நடித்த விஜய்காந்தின் நேர்மையான போலீஸ் கதாபாத்திரம் மக்களிடையே வெகுவாக பேசப்பட்டது. மேலும் இப்படம் 150 நாள் திரையில் ஓடி, பிளாக் பஸ்டர் வெற்றி பெற்று, வசூல் வேட்டையை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்