Tamil Cinema News | சினிமா செய்திகள்
மணிரத்னம் நினைப்பது நடக்கும் வரை விடமாட்டார்: அதிதி ராவ்
தமிழ் சினிமாவின் ஸ்டார் ஐகான் மணிரத்னம் தான் நினைப்பது நடக்கும் வரை விடமாட்டார் என நடிகை அதிதி ராவ் தெரிவித்து இருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் செக்கச் சிவந்த வானம். மணிரத்னம் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாகவும், லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு இன்ஜினியராகவும், அரவிந்த் சாமி அரசியல்வாதியாகவும் நடித்துள்ளனர். முதல்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் அருண்விஜயிற்கு இப்படத்தில் வில்லன் வேடம் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி ராவ் என நாயகிகளும் ஏராளமாக இருக்கிறார்கள். 90 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ள படக்குழு, விரைவில் அடுத்த கட்ட பணிகளில் இறங்க இருக்கிறது. படத்தை இந்த வருட இறுதிக்குள் வெளியிட மணிரத்னம் தீவிரம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகை ஜோதிகா போல தனக்கும் வலுவான கதாபாத்திரம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகை அதிதி ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் அழுத்தமான நடிப்பை கொடுத்து இருப்பதாக நம்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் மணிரத்னம் ரொம்ப கண்டிப்பானவர். அவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் வரை விடவே மாட்டார். அந்த வகையில், என்னை போன்ற வளரும் நாயகிகளுக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
