ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பொன்னியின் செல்வன் படத்தில் கமல் ரோல் இதுதான்! இதென்னடா சோழனுக்கு வந்த சோதனை

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் டீசர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகப் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பங்காற்றியுள்ளார் என்ற தகவல் அண்மையில் இணையத்தில் வெளியானது. டீசரில் கமலின் புகைப்படம் இல்லாததால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் கமலஹாசன் பின்னணி குரல் கொடுப்பவராக உள்ளார் என்ற செய்தியை மணிரத்னம் கூறியுள்ளார்.

அதாவது கேஜிஎஃப் படத்தில் பிரகாஷ்ராஜ் கதைக்கு பின்னணிக் குரல் கொடுத்திருப்பார். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்தில் கதையில் கமலஹாசன் பின்னணியில் குரல் கொடுத்துள்ளார்.

மேலும் தமிழ் பதிப்பில் கமலுடன் இணைந்து மணிரத்னமும் குரல் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படத்தில் கமலின் குரல் கர்ஜிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகிறது. இதனால் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் குரல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்து மற்ற மொழிகளிலும் பின்னணி குரல் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

Trending News