fbpx
Connect with us

Cinemapettai

800 கொடி மதிப்பில் இரண்டுபாகமாக உருவாகும் மணிரத்தினத்தின் புதிய படம்.! வியப்பில் கோலிவுட்

manirathinam

News | செய்திகள்

800 கொடி மதிப்பில் இரண்டுபாகமாக உருவாகும் மணிரத்தினத்தின் புதிய படம்.! வியப்பில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் இவரது படத்தில் நடிக்கும் நடிகர்க்கும் நடிகைகளுக்கும் சிறந்த நடிப்புக்காக பாராட்டுக்கள் வருவதால் பல நடிகர்களும் நடிகைகளும் இவரது படத்தில் நடிக்க விருப்பப்படுவார்கள்.

தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் கதையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த படத்திற்கு சியான் விக்ரம், ஜெயம் ரவி ,கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ,ஐஸ்வர்யாராய் ஆகிய நடிகர்களும் நடிகைகளும் இந்த படத்தில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகமாக எடுக்க மணிரத்தினம்  திட்டமிட்டுள்ளார் மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உருவாக இருக்கும் இப்படத்திற்கான மதிப்பு சுமார் 800 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக நடிகர்களும் நடிகைகளும் அறிவிக்கப்படவில்லை ஆனால் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top