கோலிவுட்டில் தற்போது களம் இறங்கும் புதுமுக இயக்குனர்கள் தமிழ் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” என்று வித்தியாசமான பெயரிலே பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் மூன்று பிம்பங்களான மணிரத்னம், பாலா மற்றும் ஏ ஆர் முருகதாஸ் முன்னிலையில் இப்படத்தின் First look வெளியிடப்பட்டது.

இப்படத்தில் சத்யராஜ், கிஷோர், வரலட்சுமி மற்றும் விவேக் ராஜகோபால் நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்தின் இயக்குனர் சர்ஜுன் மணிரத்னம் பள்ளியிலிருந்து களமிறங்குவது கூடுதல் சிறப்பு அம்சமாகவும்.

இப்படத்தின் தலைப்பிலே அசத்திய இயக்குனர் சர்ஜுன் படத்திலும் அசத்துவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.