உலக அழகியுடன் கைகோர்த்த மணிரத்னம்.. ஐஸ்வர்யா ராயை வைத்து ஹிட் அடித்த 4 படங்கள்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். பிரஷாந்த் உடன் ஜீன்ஸ் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் நான்கு படங்களில் நடித்துள்ளார். இந்த நான்கு படங்களுமே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்டது.

இருவர் : மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், நாசர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் இருவர். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் புஷ்பவல்லி மற்றும் கல்பனா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக பிரகாஷ்ராஜுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

குரு : அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் குரு. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

ராவணன் : மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான திரைப்படம் ராவணன். இந்த படத்தில் ராகினி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரைபிரபலங்கள் நடித்திருந்தனர். இதில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஐஸ்வர்யாவின் நடிப்பு பலரது கவனத்தையும் பெற்றது.

இவ்வாறு துணிச்சலாக, கதையையே தாங்க கூடிய நந்தினி என்ற கதாபாத்திரத்தை கனகச்சிதமாக பொருந்தக்கூடிய ஆள் ஐஸ்வர்யா ராய் என யூகித்து மணிரத்தினம் கொடுத்துள்ளார். அவருடைய கணிப்பு எப்போதுமே சோடை போகாது என ஐஸ்வர்யா ராயின் நடிப்பு நிரூபித்தது.

Next Story

- Advertisement -