ஓகே கண்மணி வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  சூர்யா,கார்த்தி,விஷால் இணைந்து நடிக்கும் படம்!

இதன் படப்பிடிப்பு செப்டம்பரில்தான் தொடங்கவுள்ளது. எனினும் அதற்கிடையில் இப்படத்துக்காக கூத்து பட்டறை ஒன்றை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.

இதில் கார்த்தியும் நாயகி அதிதி ராவும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நடிகர் கார்த்தி இதில் விமானி ஓட்டியாகவும் அதிதி ராவ் டாக்டராகவும் நடிக்கவுள்ளனர்.