அலைபாயுதே படத்தில் செய்த தவறை தொக்ககாக தூக்கிய நெட்டிசன்கள்.. 21வருடத்திற்கு பிறகு மணிரத்னத்திற்கு வந்த சோதனை

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின  அந்த அளவிற்கு வலுவான கதைகளை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

நாயகன் மற்றும் தளபதி போன்ற படங்கள் காலம் கடந்தும் இன்று வரை மணிரத்தினத்தின் சினிமா புகழை நிலை நிறுத்தி வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட மணிரத்தினம் படத்தில் ஒரு தவறு செய்துள்ளார் என்றால் நீங்கள் நம்புவீர்களா! நம்பித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் இவரும் ஒரு தவறு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் போன்ற நடிகர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இவ்வளவு ஏன் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை கூட இவர்தான் அறிமுகப்படுத்தி வைத்தார்.

alaipayuthey
alaipayuthey

நாயகன் படத்தில் கமல்ஹாசன் இறந்துவிடுவார். அப்போது இறந்த உடல் எப்போதுமே யாரும் கவனிக்காமல் விட்டால் ஈ மொய்த்து விடும். அதனை தத்ரூபமாக காட்ட வேண்டும் என்பதற்காக மணிரத்னம் சர்க்கரை கலந்த சட்டையை கமலஹாசனுக்கு அணிவித்து படத்தின் ஈ மொய்க்கும் காட்சியை எடுத்தார்.

இவ்வளவு கவனமாக படத்தை இயக்கி வந்த மணிரத்தினம் அலைபாயுதே படத்தின் நேரடி டப்பிங் காட்சியை எடுத்துள்ளார். அப்போது ஷாலினி பேசும் ஆடியோ நேரடியாக பதிவு செய்வதற்காக மைக் வைத்து ரெக்கார்ட் செய்துள்ளனர். ஆனால் படத்தை எடிட் செய்யும் போது மைக்கை கட் செய்யாமல் விட்டு விட்டனர். தற்போது வரை படத்தில் இந்த காட்சி இடம்பெற்று வருகிறது.

- Advertisement -spot_img

Trending News