மணிரத்னம் படத்திலிருந்து விலகிய சமந்தா…. எந்த படம் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படம் மூலமாக அறிமுகமாகியிருந்தாலும், பானா காத்தாடி, நான் ஈ போன்ற படங்களுக்கு பின்னரே சமந்தா அனைவரின் கவனத்தையும் ஈர்க்க தொடங்கினார். தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அழகும், துடிப்பான நடிப்பும் அனைவரையும் ரசிக்க வைக்கும் விதமாக உள்ளது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா திருமணத்திற்குப் பின்னர் தான் அதிகப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உண்மையில் திருமணத்திற்கு முன்பைவிட தற்போது தான் படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் தொடர் பெரும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும், தைரியமாக ஏற்று நடிக்கும் சமந்தா, மணிரத்னம் படத்தில் இருந்து விலகியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் முதலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானது சமந்தா தான்.

samantha

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்த நிலையில், சில காரணங்களால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

மணிரத்னம் படத்தில் நடிப்பதற்காக ஒவ்வொரு ஹீரோயினும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், கிடைத்த வாய்ப்பை சமந்தா நழுவ விட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்