மந்திரா பேடி

1994 ஆம் ஆண்டு தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். அப்பொழுது அவரது வயது 20 . “சாந்தி” தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் “டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே” யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.

பின்னர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது வேறு கதை என்று தான் சொல்ல வேண்டும். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவருக்கு வீர் என்ற மகன் உண்டு.

தற்பொழுது 45 வயதை கடந்து விட்டார் மந்திரா. இந்நிலையில் இவர் கோவாவில் தன் மகனுடன் விடுமுறையை கழித்துள்ளார். அங்கு அக்வா- ஸ்போர்ட்ஸ், ஜெட் ஸ்கீயிங் என அசத்தியுள்ளார். அங்கு எடுத்த சில போட்டோ மற்றும் விடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.