மங்காத்தா படத்தில் அர்ஜுன் முதல் சாய்ஸ் இல்லையாம்.. யார் அந்த மாஸ் ஹீரோ தெரியுமா.?

தல அஜித்தின் மாஸ் பற்றி தமிழ் சினிமாவில் அறிந்திடாதவர்கள் இருக்க முடியாது. கடந்த சில வருடங்களாக அஜீத் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகின்றன.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக வலிமை என்ற படம் உருவாகி வருகிறது. தற்போது கிளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருகிறார்கள். விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. 2011ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படம் அஜித்தின் முதல் 100 கோடி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து, அர்ஜுன், மஹத், வைபவ், அஸ்வின், பிரேம்ஜி, த்ரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, ராய் லட்சுமி என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர். இப்படத்தில் பிரித்வி எனும் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் அர்ஜுன் ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா தானாம். அவருடைய கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவால் நடிக்க முடியாமல் போனதாம்.

nagarjuna akhil
nagarjuna akhil

இதன்பின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் அர்ஜுனை தேர்ந்தெடுத்தாராம் இயக்குனர் வெங்கட் பிரபு. இன்றுடன் மங்காத்தா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் தல ரசிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்