நடிகை ஹன்சிகா இந்தியாவில் மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை பிரதீப் மோட்வானி தொழிலதிபரும், தாயார் மோனா மோட்வானி தோல்நோய் நிபுணரும் ஆவர். ஹன்சிகாவின் தாய்மொழி சிந்தியாக இருந்த போதும் தெலுங்கு, மராத்தி, பெங்காலி, ஆங்கிலம், இந்தி, துளு, தமிழ் ஆகிய மொழிகளை சரளமாகப் பேசுவார். மும்பையில் போடார் சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார்.

Hansika Motwani
Hansika Motwani

இவர் முதன் முதலில் தனுஷ் மாப்பிளை படத்தில் தான் அறிமுகமானார் அதன் பின்பு ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் போன்ற படத்தில் நடித்தார், மேலும் சிம்பு,சூர்யா,சிவகர்த்திகேயன்,விஷால், ஆர்யா,உதயநிதி ஸ்டாலின்,பிரபு தேவா, கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இவர் தற்பொழுது விக்ரம் பிரபு நடித்துவரும் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார், அதேபோல் நடிகர் ஆதர்வாவுடன் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்,தற்பொழுது ஹன்சிகாவின் மேனஜர் முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

hot-actress-hansika
hot-actress-hansika

அந்த புகாரில் தான் இதுவரை பணியாற்றியதற்கு சம்பளம் கொடுக்கவே இல்லை ஹன்சிகா என கூறியிருக்கிறார், ஹன்சிகாவுக்கு தற்பொழுது பெரிதாக படவாய்ப்புகள் வரவில்லை அதனால் ஹன்சிகாவின் கால் சீட் மற்ற காமிட்மன்ட் அனைத்தையும் அவரது அம்மாவே பார்த்துகொல்கிறார் என்று ஹன்சிகா தரப்பில் இருந்து தெரிவித்துள்ளார்கள்.அதுமட்டும் இல்லாமல் மேனேஜர் என யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்கள்.