Tamil Cinema News | சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜின் மாநகரம் பட ரீமேக் மூலம் பாலிவுட் செல்லும் பிரபல தமிழ் நடிகர்.. அட்ரா சக்க!
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு சென்சேஷனல் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் மற்றும் கைதி போன்ற படங்களின் மூலம் தளபதி விஜய்யை கவர்ந்து தற்போது மாஸ்டர் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனுடன் இணையும் படத்துக்கான வேலைகளில் இருந்து வருகிறார்.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் தற்போது பாலிவுட் செல்ல உள்ளது. ஏற்கனவே கைதி படம் பாலிவுட்டில் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

managaram-cinemapettai
மாநகரம் பட ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பாலிவுட்டில் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.
இது எந்த அளவுக்கு அதிகாரபூர்வமான அறிவிப்பு என்பது தெரியவில்லை. ஆனால் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வரும் எனவும் தெரிகிறது.
ஏற்கனவே விஜய் சேதுபதி அமீர்கானுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல். சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மொத்த இந்திய நடிகர்களையும் விஜய் சேதுபதி கவர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
