பெங்களூரு : முதல் திருமணத்தையும், இரு குழந்தைகள் உள்ளதை மறைத்த பெண், தன் கணவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவின் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் அஜய் தாஸ் (25). கடந்த வாரம் தன் மனைவி ஜுனாலி கோலாவை (23) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்பம் அடைந்துள்ளாரா என்ற சோதனை செய்தார். அப்போது மருத்துவர், நீங்கள் கர்பமாக இருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளதா என கேட்டுள்ளார்.

அதற்கு ஜுனாலி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என தெரிவித்துள்ளார். இதை அஜய் கேட்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டிற்கு வந்தவுடன் அஜய், ஜுனாலியிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் தகராறு ஏற்படவே, அஜய் தன் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து ஜுனாலியை தாறுமாறாக தாக்கியுள்ளார். படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார் ஜுனாலி.

அதன் பின் அவரது உடலை ஒரு போர்வையில் சுற்றி எலக்ட்ரானிக் சிட்டி ஒதுக்குப்புறத்தில் சென்று போட்டுள்ளார். அப்பகுதி வழியாக சென்ற சிலர் பெண் உயிரிழ்ந்த நிலையில் இருப்பதை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.