முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி ஆட்டநாயகன் இல்லை.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் காண உலக கோப்பை போட்டியில் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் முகமது ஷமிக்கு மேன் ஆப் தி மேட்ச் வழங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார்.  ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது முகமது சமி ஏனென்றால் இவர் நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் 16 ரன்கள் கொடுத்துள்ளார்.

இதற்கு முந்தைய ஆப்கானிஸ்தான் மேட்சுகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த  முகமது சமிக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கவில்லை. இந்த முறையும் கிடைக்கவில்லை என்பதால் ரசிகர்கள் கொந்தளித்து சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த பூம்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இது போன்ற திறமையான வீரர்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்  என்பதே ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Leave a Comment