தமிழகத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொள்வது போல தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன்கல்யாண் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொள்வதுண்டு.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் என்ற பகுதியை சேர்ந்த பவன்கல்யாண் ரசிகர், ஜூனியர் என்.டி.ஆர். ரசிகரால் குத்திக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படித்தவை:  தெறி வசூலை பாதிக்க வரும் படம் - ரசிகர்கள் அதிர்ச்சி

கோலார் பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பவன்கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பவன்கல்யாண் ரசிகர் வினோத்குமார் பேசிய பேச்சு, ஜூனியர் என்.டி.ஆர். ரசிகரான அக்ஷய் என்ற வாலிபருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

அதிகம் படித்தவை:  அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ????

இதனால் நிகழ்ச்சி முடிந்ததும் அருகில் உள்ள பாரில் மது அருந்தியபோது வாக்குவாதம் முற்றி, வினோத்குமாரை அக்சய் கத்தியால் குத்தினார். இதில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கோலார் போலீசார் அக்சய்யை கைது செய்தனர்.