Connect with us
Cinemapettai

Cinemapettai

பா.ஜ.க வெற்றியால் முதல்வர் பதவி எனக்கு வேண்டாம்..! கொந்தளித்துப் போன அரசியல் பிரபலம்

modi

India | இந்தியா

பா.ஜ.க வெற்றியால் முதல்வர் பதவி எனக்கு வேண்டாம்..! கொந்தளித்துப் போன அரசியல் பிரபலம்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் பா.ஜ.க 18 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கடந்த 2014ஆம் தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்கள் மட்டும் தான் வெற்றி பெற்றது இந்த தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியது மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி மத்திய ஆட்சியில் உள்ள பா.ஜ.க எங்களுக்கு பெரும் நெருக்கடி நிலை உருவாக்கியதாகவும், இந்து முஸ்லீம் பிரிவினைகளை ஏற்படுத்தி ஓட்டுகளை பிரித்து விட்டார்கள் என்பது போன்ற புகார் அளிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவின் இந்த வெற்றியை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என்ற கேள்வியும் அவர் எழுப்பியுள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக என்னால் எந்த ஒரு பணிகளையும் நிறைவேற்ற முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்னோட முதல்வர் பதவி அதிகாரம் அற்ற பதவியாக எனக்கு அமைந்து விட்டது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் நான் முதல்வராக இனி தொடர விரும்பவில்லை என்றும் கட்சியினரிடம் கூறியுள்ளார், இந்த நாற்காலி எனக்கானது அல்ல கட்சி தான் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், ஆனால் கட்சித் தலைவர்கள் இதனை நிராகரித்து விட்டனர் என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top