ஒவ்வொன்னும் வேற ரகம், மம்மூட்டியின் 8 வெரைட்டி படங்கள்.. நடுங்க வைத்த கொடுமன் போட்டி நம்பூதிரி

Mammootty: மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டிக்கு 72 வயது ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் இளமை துள்ளலுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த மூன்று வருடங்களில் இவர் வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம் என்பது போல் அத்தனை கேரக்டர்களும் வித்தியாசம் தான். பெரிய நடிகர் என்ற இமேஜ் பார்க்காமல் கதையை மட்டும் பார்ப்பதால் தான் இவர் கொண்டாடப்பட்டு வருகிறார். அப்படி மம்மூட்டி நடிப்பில் வெளியான 8 வித்தியாசமான படங்களை பற்றி காண்போம்.

மம்மூட்டியின் 8 வெரைட்டி படங்கள்

பீஷ்ம பர்வம்: கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இதில் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருப்பார். மூத்த சகோதரனாக குடும்பத்தை காக்கும் பொறுப்பை இவர் ஏற்றுக் கொள்வார்.

ஆனால் அவருக்கு எதிராக பல சம்பவங்கள் நடக்கும் நிலையில் அவருடைய விஸ்வரூபம் தான் படத்தின் கதை. இதில் மம்மூட்டி வழக்கம் போல தன்னுடைய யதார்த்தமான நடிப்பை கொடுத்து மிரட்டி இருப்பார்.

புழு: 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் சைக்கலாஜிக்கல் டிராமா வகையைச் சேர்ந்தது. இதில் மம்மூட்டி மனைவியை இழந்து தன் மகனுடன் வசித்து வருவார். தன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காததால் மகன் அவரை கொல்ல நினைப்பார். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. இதிலும் மம்மூட்டி அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருப்பார்.

ரோர்சாச்: மம்முட்டியின் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்தது. கர்ப்பிணி மனைவியை பறிகொடுத்த மம்முட்டி அதற்கு காரணமானவர்களை வித்தியாசமான முறையில் பழி வாங்குவது தான் இப்படத்தின் கதை. பல திருப்பங்கள் நிறைந்த இக்கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கண்ணூர் ஸ்குவாட்: கடந்த வருடம் வெளிவந்த இப்படத்தில் மம்மூட்டி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் படத்தை போன்று தான் இப்படமும் இருக்கும். ஒரு தனிப்படை மூலம் ஒரு கொலை குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை திரில்லர் மூலம் இயக்குனர் சொல்லியிருப்பார்.

காதல் தி கோர்: மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் கடந்த வருடம் இப்படம் வெளிவந்தது. கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்கும் மனைவி வெளிப்படுத்தும் அதிர வைக்கும் உண்மைதான் படத்தின் மையக்கரு. இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருப்பார் அதனாலயே படம் அதிக கவனம் பெற்றது.

பிரமயுகம்: இந்த வருட தொடக்கத்தில் வெளிவந்த இப்படம் திகில் கலந்த ஃபேண்டஸி வகையை சேர்ந்தது. இதில் கொடுமன் போட்டி எனும் நம்பூதிரியாக மம்மூட்டி மிரட்டி இருப்பார். கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நடுங்க வைக்கும் அதிலும் மம்முட்டியின் பேச்சும் வசன உச்சரிப்பும் படு மிரட்டலாக இருந்தது.

டர்போ: கடந்த மே மாதம் வெளிவந்த இப்படம் ஆக்சன் காமெடி வகையைச் சேர்ந்தது. இதில் அடிதடி வெட்டு குத்து என இருக்கும் மம்முட்டி தன் நண்பனுக்காக ஒரு விஷயத்தை செய்ய போக பிரச்சனையில் சிக்குகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதிலும் வழக்கம் போல அவர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார்.

பஜூகா: மம்மூட்டி நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் இப்படம் கேம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இதில் அவருடன் இணைந்து கௌதம் மேனன், காயத்ரி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் வழக்கம் போல எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக மம்முட்டி ரக ரகமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுவே அவரின் வெற்றி ரகசியமாக உள்ளது.

வெற்றி நாயகனாக வலம் வரும் மலையாள சூப்பர் ஸ்டார்

Next Story

- Advertisement -