200 நாட்களாக அந்த பயத்தில் வீட்டுக்குள்ளயே இருந்த மலையாள சூப்பர் ஸ்டார்.. இப்பதான் வெளிய வர தைரியம் வந்திருக்கும் போல

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் மம்முட்டி. இவர் நடிப்பில் மலையாளத்தில் பல படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தமிழில் இவர் மொத்தம் 16 படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

மம்முட்டியும் ரஜினிகாந்தும் நடித்த தளபதி திரைப்படம் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பல படங்களில் சண்டைக் காட்சிகள் உட்பட தைரியமாக நடித்த இவர் கொரனாவை கண்டு நடுங்கி பல நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளார்.

மார்ச் மாதம் ஐந்தாம் தேதி த ப்ரிஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்ற இவர் 200 நாட்களுக்கு பிறகு தற்போதுதான் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

mammootty-cinemapettai
mammootty-cinemapettai

தமிழில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் பேரன்பு. ராம் இயக்கிய இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் விமர்சன ரீதியாக இவர்கள் இருவருக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ, ஒரு வழியாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார் என பெருமூச்சு விடுகிறார்களாம் அவரது ரசிகர்கள்.