21 ஆண்டுகள் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்ட மம்முட்டி.. அவருக்குப் பின்னால் இப்படி ஒரு சோகமா?

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மலையாள நடிகர் மம்முட்டி. தமிழில் ரஜினிகாந்த் எப்படியோ அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி மிகப் பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினியுடன் இணைந்து இவர் நடித்த தளபதி படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இவரது மகன் துல்கர் சல்மானும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மலையாளம், தமிழ் என துல்கர் சல்மானும் தன் தந்தையைப் பின்பற்றி பிஸியாக நடித்து வருகிறார். மம்முட்டியின் மகன் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, மம்முட்டியின் சினிமா மார்க்கெட் இன்னமும் இறங்கவே இல்லை. நாளுக்கு நாள் அது உயர்ந்துகொண்டேதான் போகிறது.

தற்போது தனது மகன் துல்கர் சல்மான் தயாரிப்பில் ‘புழு’எனும் படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பங்கேற்ற மம்முட்டி, அந்த மருத்துவமனையில் நிகழ்ந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

mammootty

மம்முட்டி கூறியதாவது, “சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் எனது இடதுகாலின் தசை நார் சேதமடைந்து விட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அறுவை சிகிச்சை செய்தால் காலின் நீளம் குறைந்துவிடும் எனவும் கூறினார்கள்.

காலின் நீளம் குறைந்து குட்டையானால், நடிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். ஒரு கால் மட்டும் குட்டையாக இருந்தால் கிண்டல் செய்வார்களே என நினைத்து கவலைப்பட்டேன். அதனால் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டேன்” என கூறியுள்ளார்.

நடிகர் மம்முட்டி ஒருநாள் அல்ல ஒரு வாரம் அல்ல சுமார் 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டிருக்கிறார். இந்த வலியோடு இத்தனை ஆண்டுகள் எப்படி நடித்தார்? 21 ஆண்டுகளாக வலியோடு அவஸ்தைப்பட்டு வருகிறாரா? என நினைத்து அவரது ரசிர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

- Advertisement -