இந்திய அணி ஸ்ரீலங்கா சுற்றுப் பயணத்தில் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. நான்காவது ஒரு நாள் போட்டி கடந்த வியாழன் அன்று நடைபெற்றது ,அதிலும் இந்தியா மிக சுலபமாக வெற்றி பெற்றது.

இலங்கை அணி தோல்வி மேல் தோல்வி அடைந்தாலும்; லசித் மலிங்காவிற்கு இது மிகச் சிறப்பான வாரமாகவே தான் அமைந்தது.                                                              * ஆகஸ்ட் 28 அன்று தன் 34 வது  பிறந்த நாளை கொண்டாடினார்.                                * வியாழன் நடந்து போட்டியில் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.                          * ஒரு நாள் போட்டியில் 300 வது விக்கெட்டாக கோஹ்லியை அவுட் ஆக்கினார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய மற்றும் இலங்கை வீரர்களுக்காக தனது வீட்டில் டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்து இருந்தார்.

ஐபில் போட்டிகளில் ஒன்றாக சேர்ந்து விளையாடும் காரணத்தால், நாட்டின் வேற்றுமை மறந்து மிக சகஜமாகவே பழகிக் கொள்கின்றனர் இரு நாட்டின் கிரிக்கெட் வீரர்களும் .

மலிங்கா மும்பை இந்தியன்ஸ் டீமில் விளையாடிய காரணத்தால் அதன் கேப்டன் ரோஹித் சர்மா , ஹர்டிக் பாண்டியா  அவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டது, இந்த புகைப் படங்களை பார்க்கும் பொழுதே தெரிகிறது.  முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கோச் மஹேல ஜெயவர்தனேவும் இதில் கலந்து கொண்டார்.

இதில் எடுக்கப்பட்ட போட்டோக்களே தற்போழுது வைரலாக இணையத்தில் பரவப் படுகிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ் : இந்திய அணி மேற்கு இந்தியதீவுகளில் விளையாட சென்ற பொழுது ட்வயனே பிராவோ வீட்டிற்கு சென்று பார்ட்டி கொண்டாடியதும்  நாம் அறிந்த விஷயமே.