அனல் பறக்கும் விக்ரம் பட புரமோஷன்.. மலேசியாவில் மட்டும் மண்ணை கவ்விய கமலஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விக்ரம் படம் பான் இந்தியத் திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனால் கமல் இப்படத்தின் பிரமோஷனுக்காக ஊர் ஊராக பறந்து கொண்டிருக்கிறார். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் சுறுசுறுப்பாக அதே எனர்ஜியுடன் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் கமல் கேரளா சென்ற போதும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த வயதிலும் படத்தின் புரமோஷன் வேலைகளுக்காக இவ்வளவு எனர்ஜியுடன் கமல் செயல்படுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக நேற்று கமல் மலேசியா சென்று அங்குள்ள மக்களை சந்தித்து உள்ளார்.

அதில் ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனது பாணியில் அசராமல் சுவாரஸ்யமான பதில்களை அளித்து அசத்தியுள்ளார் கமலஹாசன். ஆனால் மலேசியா மக்களுக்கு கமல் மீது சிறிது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மலேசியாவில் இந்த பங்க்ஷன் 3 மணிக்கு ஆரம்பித்துவிட்டதாம்.

ஆனால் கமல் அந்த நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார். மேலும் கமல் வருகைக்காக காத்திருந்த ரசிகர்களிடத்தில் எந்த ஒரு வருத்தமும் கமல் தெரிவிக்கவில்லையாம். மேலும் நடிகர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் என அங்குள்ள மக்கள் முணுமுணுத்து விட்டு சென்றுள்ளனர்.

மேலும் கமல் அந்நிகழ்ச்சிக்கு போவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் பாதி ரசிகர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். புரோமோஷன் வேலைகள் தடபுடலாக நடந்தாலும் மலேசியா மக்கள் மத்தியில் கமலின் இந்த செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்