மலையாள ரீமேக், மரண ஹிட்டடித்த 7 படங்கள்.. தளபதியின் கேரியரை தூக்கி விட்ட காதல் காவியம்!

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளத்திற்கு தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகள் கண்டு வருகிறோம். இந்த தலைப்பில் மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற சில திரைப்படங்களை காணலாம்.

மலையாள சினிமாவும் தமிழ் சினிமாவில் எப்போதும் நெருங்கிய அவரும் அந்தரத்தில் இருப்பது மறுக்க முடியாத ஒன்று. பல நல்ல தமிழ் சினிமாக்கள் மலையாளத்திலும் பல நல்ல மலையாளத் திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். பல நேரங்களில் இத்தகைய ரீமேக்கள் மாபெரும் வெற்றி பெறும். சில சமயங்களில் இத்தகைய அமைப்புகள் சரியான புரிதல் இல்லாமல் தயாரிக்கப்படும் போது தோல்வியை காணவும் தவறுவதில்லை. இந்த பட்டியலில் அவ்வாறு மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்து வெற்றி கண்ட வரிசையை காணலாம்.

அண்ணா நகர் முதல் தெரு: 1982ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், ராதா, அம்பிகா, பிரபு, ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்குனர், நகைச்சுவை நடிகர் பாலு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவான இதில் ஜனகராஜ், மனோரமா மற்றும் பலர் செய்திருக்கும் காமெடி இன்றும் ரசிக்க வைக்கும். சந்திரபோஸ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். மோகன்லால், கார்த்திகா, திலகன், சீமா மற்றும் பலர் நடித்த மலையாள திரைப்படமான காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் திரைப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த திரைப்படம்.

கோபுர வாசலிலே: 1991-ஆம் வருடம் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோபுர வாசலிலே. இசைஞானி இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்த திரைப்படத்தில் கார்த்திக், பானுப்ரியா, நாசர், சார்லி உட்பட பலர் நடித்திருந்தனர். முதல் காதலில் ஏற்பட்ட விபத்து காரணமாக திருமணத்தை தள்ளி போடும் இளைஞனாக கார்த்திக் இந்த படத்தில் நடித்திருந்தார். சீனிவாசன், ரேகா, சித்திக் மற்றும் பலர் நடித்த பாவம் பாவம் ராஜகுமாரன் என்ற திரைப்படத்தை உரிமை வாங்கி தமிழில் கோபுரவாசலிலே எனும் பெயரில் எடுத்தனர்.

முத்து: மோகன்லால், ஷோபனா, நெடுமுடி வேணு மற்றும் பலர் இணைந்து நடித்த மலையாள திரைப்படமான தென்மாவின் கொம்பத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, வடிவேலு, செந்தில் உட்பட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றிபெற்ற இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ஜனரஞ்சக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

காதலுக்கு மரியாதை: 1997 ஆம் ஆண்டு வெளிவந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்று காதலுக்கு மரியாதை. தளபதி விஜய் அவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது மிகையல்ல. இந்த திரைப் படத்தை மலையாளத்தில் இயக்கிய பாசில் அவர்கள் தமிழிலும் இயக்கினார். மலையாளத்தில் இந்த படத்திற்கு வைத்த பெயர் அனியத்திபுறாவு. மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் பக்கபலமாக இருந்தது என்பது முற்றிலும் உண்மை. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்து இருந்தார் என்பது கூடுதல் தகவல். மலையாளத்திலும் இதே கதாநாயகி வேடத்தில் அவரே செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுந்தரா ட்ராவல்ஸ்: முரளி, வடிவேலு, வினு சக்ரவர்த்தி காம்பினேஷனில் பட்டையை கிளப்பிய நகைச்சுவை திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். மலையாளத்தில் வெளிவந்த ஈ பறக்கும் திலக்கா எனும் படத்திற்கு கதை வசனம் எழுதிய அசோகன் தமிழில் இந்தப் படத்தை இயக்கினார். நல்லதொரு வெற்றியை பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு பரணி இசையமைத்திருந்தார்.

சந்திரமுகி: ஷோபனா சுரேஷ்கோபி மோகன்லால் நடித்த மலையாள திரை உலகை ஸ்தம்பிக்க வைத்த திரைப்படம் மணிசித்திரதாழ். இந்த படத்தை இயக்கி இருந்தார் பாசில். இந்த படத்தை முறைப்படி உரிமம் வாங்கி தமிழில் பி வாசு இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்த இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் வரும் காமெடி காட்சிகளும் மலையாளத்தை விட தமிழில் சிறப்பாக அமைந்தது.

பாபநாசம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சந்திரமுகி அமைந்தது போல உலக நாயகன் கமலஹாசனுக்கு சிறப்பாக அமைந்த ரீமேக் திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட மோகன்லால் நடித்த திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்தான் பாபநாசம். எதிர்பாராமல் நிகழும் கொலையை தனது குடும்பத்திற்காக மறைக்கும் கதாபாத்திரத்தில் மோகன்லால் திரம்ப்பட நடித்திருந்தார். அதே போல தமிழிலும் கமல்ஹாசன் திறமையாக நடித்திருந்தார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்கினார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

Next Story

- Advertisement -