Reviews | விமர்சனங்கள்
ஹாலிவுட் தரத்தில் தரமான திரில்லர்! பாஹத் பாசிலின் இருள் விமர்சனம்
கொரோனா சூழலில் ஒருமாத கால காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘இருள்’. மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள், அதில் இருவர் கெஸ்ட் ரோல், எனவே மூன்று கதாபாத்திரங்களை வைத்தே இந்த whodunnit திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் நஸீப் யூசுப் இஸுதீன். பஹத் பாசில் மற்றும் சௌபின் சகீர் இருவரில் யார் கொலைகாரன் என கண்டுபிடிப்பதே நாயகி தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் ரசிகர்களான நமது வேலை.
கதை – தொழிலதிபர் ஆனாலும் தன் ஆசை காரணமாக எழுத்தாளர் ஆக மாறியவர் சௌபின். ஐந்து கொலைகளை செய்த கொலையாளி பற்றிய விஷயங்களை ஆராய்ந்து இருள் என்ற நாவலை எழுதியுள்ளார்.
வக்கீல் தர்ஷனா அதீத பிஸியாக இருப்பவர். மூன்று மாதங்களாக இவருக்கும் சௌபினுக்கும் பழக்கம். இன்னமும் இவர் சௌபினின் புக்கை படிக்கவில்லை. ட்ரிப் செல்லலாம் என முடிவு செய்கிறது ஜோடி. போன் எடுக்காமல் செல்வோம், தொல்லை கிடையாது என்பது நம் எழுத்தாளரின் பிளான். பாதி வழியில் கார் பிரேக் – டவுன் ஆகிறது. மழைக்கு இந்த ஜோடி ஒரு வீட்டில் ஒதுங்குகிறது.
கதவை தட்டி யாரும் திறக்கவில்லை, எங்காவது இருக்குமோ என சாவியை தேடுகிறார் எழுத்தாளர் அந்த நேரத்தில் கதவை திறக்கிறார் பாஹத் பாசில். போன் வேலை செய்யவில்லை என்கிறார். மாற்று உடை கொடுக்கிறார், குடிக்க சரக்கும் தருகிறார்.
புக்கை பற்றிய பேச்சு வருகிறது, சரியாக எழுதப்படவில்லை என்கிறார் பாகாத், அவரும் ஷோபினும் விவாதத்தில் ஈடுபடுகின்றனர். பவர் கட் ஆகிறது. துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. சோபின், பாஹத் தான் எழுதிய புக்கின் ஒரிஜினல் சீரியல் கில்லர் என கூறி அவனை கட்டி போடுகிறான். பாஹத் நான் ஒரு திருடன், இது சோபினின் வீடு தான், அவர் தான் கொலையாளி என சொல்கிறான். குழப்பத்தில் தர்ஷனா திகைக்கிறாள்.
இறுதியில் யார் உயிர் பிழைக்கிறார்கள், யார் சீரியல் கில்லர் என்பது நமக்கும் ஹீரோயினுக்கும் தெரியவர முடிகிறது படம்.
சினிமாபேட்டை அலசல் – நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, வசனம் என அனைத்துமே பிளஸ். ஒவ்வொரு ஃபிரேம்மையும் செதுக்கியுள்ளனர் இந்த டீம். ஐந்து, ஆறு நபர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிக்கும் படங்களை போல இல்லாமல், இருவரை வைத்து மிரட்டியுள்ளார் இயக்குனர்.
இவரா அல்லது அவரா என நம்முள் ஒரு சிறிய பதைபதைப்பை ஏற்படுத்தி இறுதியில் படத்தை முடிக்கிறார் இயக்குனர். பாஹத் மற்றும் ஷோபின் இருவருமே பொய்யில் உண்மை கலந்து பேசுவது நமக்கு தெரிகிறது. அதே சமயம் பழைய பிளாஷ் பேக் என எதுவும் சேர்த்து நம் பொறுமையை சோதிக்கவில்லை இந்த டீம். ஆனாலும் கதாபாத்திரங்கள் மேம்போக்காக மட்டுமே காட்டப்படுகிறது,

irul team
சினிமாபேட்டை வெர்டிக்ட்– இன்னும் அதிக விஷயங்களை சேர்த்திருக்க ஸ்கோப் உள்ள படம். எனினும் இப்படத்தின் வெற்றி கட்டாயம் அடுத்த பார்ட் எடுக்க இவர்களை தூண்டும். உலக சினிமா விரும்பிகள் வீட்டில் அமர்ந்து ஹாயாக இப்படத்தை கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5
