பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் அனைவரது கவனமும் திரும்பி இப்பொழுது அதை பற்றி சிந்திக்காமல் அவரவர் வேலையை பார்க்க தொடங்கி உள்ளனர் .

ganesh

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்தாலும் அவரவர் வாழ்க்கை மற்றும் வாய்ப்புகளை பற்றி நாம் செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் கேட்டவண்ணம் உள்ளோம். இவ்வாறு ஒருஒருவருக்கும் வாய்புகள் வந்தவண்ணம் உள்ளன

பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதில் கலந்து கொண்ட பலரும் தற்போது மிகவும் பிரபலம் ஆகிவிட்டனர். அவர்களை தேடி தற்போது பட வாய்ப்புகளும் வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி இவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது என்று சொல்லலாம்.

ganesh

ஓவியாவை அடுத்து ஹரிஷ் கல்யாண், ரைசா, ஆரவ், ஜூலி போன்ற பலர் புதிய படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளனர்.

இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராம் மலையாளத்தில் உருவாகும் ‘மை ஸ்டோரி’ படத்தில் கமிட்டாகி உள்ளாராம். பிருத்விராஜ், பார்வதி நடிக்கும் இப்படத்தை ரோஷினி தினகர் எனும் பெண் இயக்குநர் இயக்குகிறார்.

ganesh

கணேஷ் வெங்கட்ராமின் நிஜ கேரக்டர் இயக்குனருக்கு பிடித்துப் போகவே இப்படத்தில் அவரை கமிட் செய்தார்களாம். கணேஷ் வெங்கட்ராம், ஏற்கெனவே மலையாளத்தில் மோகன்லால், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்த ‘கண்டஹர்’ எனும் படத்தில் நடித்திருக்கிறார்.

பிருத்விராஜ் மற்றும் பார்வதி இருவரின் கூட்டணியில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அந்தப் படம் பல விருதுகளையும் குவித்தது குறிப்பிடத்தக்கது. காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் ‘மை ஸ்டோரி’ படம் மலையாள திரையுலக ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும்.