பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மலையாள நடிகை மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தொடங்கினார்.

மலையாள திரையுலகின் பிரபல நடிகை சில தினங்களுக்கு முன்பு காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். அவரை காரில் கடத்திச்சென்றது நடிகையின் முன்னாள் டிரைவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கார் டிரைவர் மார்டின் கைது செய்யப்பட்டார். அவரைத்தொடர்ந்து கோவையில் 2 பேரும், பாலக்காட்டில் மணிகண்டன் என்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனில் மற்றும் விஜேஷ் இருவரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சரணடையும் முன்பு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரின் விசாரணை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகை சக நடிகர்களின் ஆறுதலாலும், ஊக்கத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டார். இவர் நடிகர் பிரித்விராஜூடன் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஜினு அப்ரஹாம் இயக்கத்தில் பிரித்விராஜ், நரேன் நடிக்கும் ஆதாம் படத்தில் நடிக்கிறார். திட்டமிட்டபடி படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள தொடங்கினார்.