fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

12 வருடங்கள் கழித்து ‘பூ’ பார்வதி போட்ட வைரல் பதிவு.. அந்த படத்தின் மூலம் தான் நடிகையாக அங்கீகாரம் கிடைத்தது

parvathy-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

12 வருடங்கள் கழித்து ‘பூ’ பார்வதி போட்ட வைரல் பதிவு.. அந்த படத்தின் மூலம் தான் நடிகையாக அங்கீகாரம் கிடைத்தது

மோலிவுட்டில் தனது அசரவைக்கும் நடிப்பால் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பார்வதி திருவோது. இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்ததோடு, பாலிவுட்டிலும்  நடித்துள்ளாராம். தற்போது இவரது நடிப்பில் வரும் ஒவ்வொரு படங்களும்  பல திரைப்பட விருதுகளை அள்ளுவதோடு மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனையையும் புரிந்து வருகிறது.

ஏனென்றால், பார்வதி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும். மேலும் பார்வதி தமிழில் முதல்முறையாக அறிமுகமான படம் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான ‘பூ’ என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ‘பூ’ திரைப்படம் உருவாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளை கடந்த பிறகு தற்போது அந்தப்படத்தைப் பற்றி பார்வதி நிகழ்ச்சியாக போட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதோடு, பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

அதாவது ‘பூ’ திரைப்படத்தில் பார்வதி, மாரி என்ற கதாபாத்திரத்தில்  தாறுமாறாக  நடித்து, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். இந்த திரைப்படத்தில் பார்வதியின் கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருவதற்கு அவருடைய தத்ரூபமான நடிப்பே காரணமாகும்.

தற்போது பார்வதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், இயக்குனர் சசி மாரி கதாபாத்திரத்தை பற்றி தன்னிடம் கூறியபோது அது அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அதனால்தான் அந்த அளவிற்கு அவரால் தத்ரூபமாக நடிக்க முடிந்தது என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், அந்த கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து கொண்டதன் காரணமாக தான் தன்னால் மிக இயல்பாக அந்த கதாபாத்திரத்தை வெளிப்படுத்த முடிந்தது என்று  குறிப்பிட்டிருக்கிறார் பார்வதி.

actress-parvathy-cinemapettai

actress-parvathy-cinemapettai

எனவே, பலரது மனதில் இன்றுவரை பதிந்திருக்கும் ‘பூ’ திரைப்படத்தைப் பற்றி பார்வதி போட்டுள்ள இந்த நெகிழ்ச்சியான ட்வீட் ரசிகர்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top