Tamil Cinema News | சினிமா செய்திகள்
சபரிமலையில் போராட்டம் வலுக்கும் நேரத்தில், தன் படம் “ஐயப்பன்” பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரித்விராஜ் சுகுமாரன்.
பிரித்விராஜ் ஹீரோவாக ஆடுஜீவிதம், காளியன், 9, டிரைவிங் லைசன்ஸ், பிரதர்ஸ் டே மற்றும் இயக்குனராக லூசிபயர் என செம்ம பிஸி. இந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் தன் அடுத்த பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.
ஐயப்பன்
உருமி படத்தை எழுதிய ஷங்கர் மஹாதேவன் தான் இப்படத்தை எழுதி இயக்குகிறார். பல வருடங்களுக்கு முன்பே இந்த கதையை ஹீரோ பிரித்விராஜ் அவர்களிடம் சொல்லியுள்ளார். இந்த கனவு ப்ரொஜெக்ட் என்றாவது நிஜமாகும் என நினைத்தேன், அது இப்பொழுது ஆகியுள்ளது என்று இந்த முதல் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

prithviraj in Ayyapan
விரைவில் நடிக்கப்போவது யார், டெக்கினிக்கல் டீம் விவரம் வெளியாகும். ஆகஸ்ட் சினிமாஸ் படத்தை தயாரிக்கின்றனர். இந்த நிறுவனத்தை துவக்கிய சமயத்தில் ப்ரித்விராஜும் ஒரு பார்ட்னர், சென்ற வருடம் இவர் அதில் இருந்து விளகினார்.
இப்போஸ்டர் லைக்ஸ் குவித்து வருகிறது.
