Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதியை தப்பா பேசின நடிகருக்கு பதிலடி கொடுத்த பிரபலம்

தமிழ் சினிமாவே கொண்டாடி வரும் நடிகர் என்றால் அது நடிகர் விஜய் என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இவருக்கு கேரளா மற்றும் ஆந்திராவில் ஏராளமான ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் விஜய் தற்போது தளபதி 63 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் மலையாள நடிகர் சித்திக் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில் மலையாள சினிமா அதிர்ஷ்டம் அடைந்துள்ளது என்றும் மம்முட்டி மோகன்லால் போன்ற சிறந்த நடிகர்கள் கொண்டது எனவும் கூறியுள்ளார்.
மேலும் இவர் மற்றும் மொழி நடிகர்கள் எடுத்துக்கொண்டால் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக இருக்கலாம் ஆனால் சிறந்த நடிகர் கிடையாது கமலஹாசன் தான் ஒரு நல்ல நடிகர் என கூறியுள்ளார்.
அதற்கு மெர்சல் படத்தில் நடித்த மலையாள சினிமாவின் மற்றொரு நடிகரான ஹரிஷ் பெரடி அவரது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் சித்துவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் என்ன எழுதி உள்ளார் என்றால் இளைய தளபதி விஜய் சூப்பர் ஸ்டார் மட்டுமில்லாது, சூப்பர் நடிகர் எனவும் மற்ற சூப்பர் ஸ்டார்களைத் தாண்டி விஜய் மிகவும் நல்ல மனிதர் எனவும் அதில் பதிவு செய்துள்ளார்.
இதனைக் கேட்ட விஜய் ரசிகர்கள் சித்துவை சமூக வலைதளங்களில் கழுவி ஊத்தி வருகின்றனர்.
