ஐயப்பனும் கோஷியும் பிரபலம் மரணம்.. காரணத்தை கேட்டு மிரண்டு போன திரையுலகம்!

பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் அனில்.

இவர் முதலில் நாடகத்துறையில் பணியாற்றிய பின்பு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனால் கடந்த இருபது வருடங்களாகத்தான் மலையாள சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஐயப்பனும் கோஷியும் படத்தில் இவர் நடித்த போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எந்த அளவிற்கு பிரித்திவிராஜ்விற்க்கு இப்படத்தில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்களோ அதே அளவிற்கு இவருடைய போலீஸ் நடிப்பிற்கும் ஆதரவு கொடுத்தனர்.

anil
anil

ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அனில் அவர்களது நண்பர்களுடன் அருகிலுள்ள மலங்கரா அணைக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் இவர் தண்ணீரின் ஆழத்தில் மூழ்கியுள்ளார். அதனை பார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்டெடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவரை மீட்க முடியாமல் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் மலையாள சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர் சமீபத்தில் நடித்த அனைத்து படங்களுமே ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.