Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் படத்தை நம்பி ஏமாந்த மாளவிகா மோகனன்.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்!

thalapathy-vijay-malavika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் படத்தை நம்பி ஏமாந்த மாளவிகா மோகனன்.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை தான்!

பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார் மாளவிகா மோகனன்(Malavika Mohanan).

மலையாள வரவான மாளவிகா மோகனன் முதன்முதலில் துல்கர் சல்மான் ஜோடியாக மலையாள படமொன்றில் நடித்து இருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறாததால் அவருக்கும் படவாய்ப்புகள் இல்லை.

மீண்டும் ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு டாப் ஹீரோயினாக வலம் வருவோம் என நம்பிக்கொண்டிருந்தவர் கனவில் மண்ணைப் போட்டு விட்டது கொரானா.

தற்போது மாஸ்டர் படத்தை வெளியிடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தன்னுடைய சம்பளத்தையும் ஏற்ற முடியாமல் தடுமாறி வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு முன்னணி நடிகரான ரவிதேஜாவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

அது மட்டும் இல்லாமல் ஓரளவு கணிசமான சம்பளமும் பேசப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்டர் படத்திற்கு பிறகு தன்னுடைய ரேஞ்சே வேற என நினைத்துக் கொண்ட மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்திற்கு பிறகு தான் மற்ற படங்களில் ஒப்புக் கொள்வது என முடிவு செய்துள்ளாராம்.

அப்போதுதான் சம்பளத்தை சடாரென உயர்த்த முடியும் என கணக்குப் போட்டு வருகிறாராம். இந்நிலையில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக நீண்ட நாள் கழித்து வெளிவரும் மாஸ்டர் படத்திற்காக தற்போது வரும் வாய்ப்புகளை இழக்கிறாரா என ஆதங்கப்படுகிறது சினிமா வட்டாரம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top