Connect with us

Cinemapettai

மாஸ்டர் ட்ரெய்லர் பார்த்ததும் மெர்சலாயிட்டேன் என்ற மாளவிகா.. பத்து பைசா செலவில்லாமல் பப்ளிசிட்டி.. மாஸ்டர் பிளான்

vijay-malavika-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் ட்ரெய்லர் பார்த்ததும் மெர்சலாயிட்டேன் என்ற மாளவிகா.. பத்து பைசா செலவில்லாமல் பப்ளிசிட்டி.. மாஸ்டர் பிளான்

நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தினைப் பற்றிய செய்திகள் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்து வருகிறது. மாஸ்டர் படத்தில் நடித்த நடிகர்கள் முதல் வேலைசெய்த ஆட்கள் வரை அனைவரும் படத்தினைப் பற்றி பெரிய அளவில் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

சமீபத்தில்கூட படத்தின் இணை இயக்குனர் மற்றும் எழுத்தாளராக பணியாற்றும் மேயாதமான் இயக்குனர் ரத்னா, மாஸ்டர் படத்தின் இடைவேளையில் செம ட்விஸ்ட் ஒன்று இருப்பதாகவும், அது தியேட்டரை கிழிக்கும் வகையில்(தியேட்டர் ஓனர்ஸ் உசாராக வேண்டிய சமயம்) அமையும் எனவும் ரசிகர்களை உசுப்பேற்றி விட்டார்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வரும் போது பார்த்ததாகவும், அந்த டிரைலரை பார்த்ததும் விஜய்யின் மீதும் அவரது ஸ்டைலில் மீது பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இதுவரை இப்படி ஒரு மாஸான ட்ரெய்லரை பார்த்ததே இல்லை எனவும், மாஸ்டர் படத்தின் trailer வெளியீட்டுக்கு பைத்தியம் போல் காத்திருப்பதாகவும் பேட்டி கொடுக்கும்போது கூறியிருந்தார்.

ஏற்கனவே குறித்த தேதியில் படம் வெளியாகாததால் அப்செட்டில் இருக்கும் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் பணியாற்றுபவர்கள் மாஸ்டர் படத்தினைப் பற்றி பெரிய அளவில் பில்டப் கொடுப்பதால் படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் அடிக்கும் என கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். அதற்காகவே படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top