Connect with us
Cinemapettai

Cinemapettai

malavika-mohanan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காட்டிய கவர்ச்சிக்கு கண்டபடி கொட்டும் பட வாய்ப்புகள்.. விஜய்யை தொடர்ந்து டாப் ஹீரோவுடன் ஜோடி

தமிழ் சினிமாவில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா மோகனன், அடுத்ததாக விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்துக்குதான் தற்போது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி என்ற படம் வெறும் கதையை மட்டுமே நம்பி வெளியாகி 100 கோடி வசூலை பெற்றதால் அனைவரது கவனமும் லோகேஷ் கனகராஜ் மேல் உள்ளது.

அதனால்தான் தளபதி விஜய் பட வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்,

பல முன்னணி நடிகைகள் விஜய்யுடன் நடிப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் போது இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.

தற்போது பாலிவுட்டுக்கு பறக்க உள்ளார் மாளவிகா மோகனன். பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். ரன்வீர் சிங்கின் அடுத்த படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

Continue Reading
To Top