fbpx
Connect with us

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ், படத்தில் பிடித்த பாடல் பற்றி மனம் திறந்த மாளவிகா மோகனன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டர் இயக்குனர் லோகேஷ், படத்தில் பிடித்த பாடல் பற்றி மனம் திறந்த மாளவிகா மோகனன்

இன்று கோலிவுட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை மாஸ்டர் தான். ஏப்ரலில் ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் சுமார் 10 மாதங்களாக முடிந்த படத்தை கையில் வைத்துக்கொண்டு காத்திருந்தனர். போக்கிரி பொங்கலை போல பலத்த எதிர்பார்ப்புடன் மாஸ்டர் பொங்கல் தயாராகி வருகின்றது.

மாஸ்டர் படத்தை நாளை ரசிகர்கள் திரை அரங்கில் காண ஆர்வமாக உள்ளனர். படக்குழுவும் முழுவு வீச்சில் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மாளவிகா மோகன், ரசிகர்களுடன் ட்விட்டரில் கேள்வி பதில் செக்ஷனில் கலந்துகொண்டார். ரசிகர்களின் கேள்விக்கு அசத்தலாக பதில் தந்து வந்தார்.

அப்பொழுது இயக்குனர் பற்றி கேட்டதுக்கு, “இந்த நேரத்தில் இந்தியாவில் திறமை வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர்.” என பதில் தந்தார்.

படத்தில் பிடித்த பாடல் என்ற கேள்விக்கு, “குட்டி ஸ்டோரி மற்றும் அந்த கண்ணை பார்த்தா.” என சொல்லியுள்ளார்.

master malavika tweet

Continue Reading
To Top