Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதனால தான் தனுஷுக்கு ஓகே சொன்னேன்.. மாளவிகா மோகனின் ஓபன் டாக்!
தமிழ்சினிமாவில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த ‘பேட்ட’ என்ற ஒரே படத்தின் மூலம் டாப் ஹீரோயினாக மாறியவர் தான் நடிகை மாளவிகா மோகன்.
இதனைத் தொடர்ந்து மாளவிகா தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை மாளவிகா மிகக் குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போடும் மாளவிகா மோகன் அடுத்ததாக தனுஷுடன் நடிக்க உள்ளார் என்ற தகவல் நாம் அறிந்ததே.
இந்த நிலையில் தனுஷுடன் நடிக்க இது தான் காரணம் என்று ஓபன் ஆக மாளவிகா பேசி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை பற்றி மாளவிகா கூறும்போது, தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு மாளவிகாவிடம் கொரோனா பாதிப்பிற்கு முன்பே படக்குழுவினர் அணுகி இருந்தார்களாம்.
ஆனால் அந்த நேரத்தில் மாளவிகாவிடம் மூன்று படங்கள் கைவசம் இருந்ததால், தனுஷ் படக்குழு கேட்ட தேதி அவரிடம் இல்லாமல் போனதாம்.
இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தன் கைவசம் இருந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போய்விட்டதாம்.
எனவே, தனுஷ் படக்குழுவினர் மீண்டும் மாளவிகாவை அணுகியபோது அவரிடம் தேதிகள் இருந்ததாகவும் அதனால் தான் அவர் ஒப்பந்தமான தாகவும் குறிப்பிட்டிருக்கிறார் மாளவிகா. இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.
