Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த மாதிரி போட்டோக்கு தான் ரசிகர்கள்.. காரசாரமான கேள்விக்கு பதிலளித்த மாளவிகா
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். அதன்பிறகு விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தின் மூலம் மாளவிகா மோகனுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு மாறன் படம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை மாளவிகா மோகன் வெளியிட்டு வருகிறார்.
இதனாலேயே இவரை பல மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் மாறன் படத்தில் தனுஷுடன் நெருக்கமான காட்சியில் மாளவிகா நடித்திருந்தார். இதனால் ஒரு ரசிகர் தனுசுடன் படுக்கை அறை காட்சிகள் நடிக்கும் போது எத்தனை டேக்குகள் எடுத்தீர்கள் என கேட்டிருந்தார்.
அதற்கு மாளவிகா மோகன் அந்த இடத்தை விட உங்கள் மூளையில் இருக்கும் இடம் தான் மிகவும் கேவலமானது என்று கூறி சரியான பதிலடி கொடுத்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு ரசிகர் நீங்கள் திறமையான நடிகை எல்லாம் கிடையாது.
அது உங்களுக்கே தெரியும். மாளவிகாவின் ரசிகர்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் நீங்கள் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காக மட்டும்தான் உங்கள் ரசிகர் என கூறிக் கொள்கிறார்கள் என பதிவிட்டிருந்தார்.

malavika mohan
அதற்கு மாளவிகா மோகன் எனக்கும் அது தெரியும், அப்படி என்றால் நீங்களும் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பதற்காக தான் வந்தீர்களா என அவருக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு நடிகைகளை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு தற்போது தைரியமாக அந்த நடிகைகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
