தனுசுடன் நெருக்கமாக நடித்தது எப்படி இருந்தது.. செருப்படி பதில் கொடுத்த மாளவிகா

மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவருக்கு விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். எங்கு சென்றாலும் அவரை ரசிகர்கள் மாஸ்டர் பட நடிகை என்று கூறும் அளவுக்கு அவருக்கு புகழ் கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் அவருக்கு அதன் பிறகு புது பட வாய்ப்புகள் குவிந்தது.

அந்த வகையில் அவர் சமீபத்தில் தனுசுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்

லை. இந்நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகாவிடம் ஒரு ஏடாகூடமான கேள்வியை கேட்டுள்ளார்.

அதாவது மாளவிகா, மாறன் திரைப்படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்திருந்தார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் மாளவிகாவிடம் தனுஷ் உடன் படுக்கை அறை காட்சியில் நடிக்கும்போது எத்தனை முறை டேக் எடுத்தீர்கள் என்று கேட்டார்.

இப்படி ஒரு கேள்வியை எதிர் பார்க்காத மாளவிகா மோகனன் அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் செருப்படி தரும் விதமாக ஒரு பதிலை கொடுத்து அந்த ரசிகரை ஆஃப் செய்துவிட்டார். அதாவது அவரின் கேள்விக்கு மாளவிகா அதைவிட உங்கள் மண்டைக்குள் இருப்பதுதான் மோசமான இடம் என பதிலளித்துள்ளார்.

malavika-reply
malavika-reply

மாளவிகாவின் இந்த பதிலை பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபகாலமாக சோசியல் மீடியாவில் இருக்கும் நடிகைகளிடம் நெட்டிசன்கள் இது போன்ற சில கேள்விகளை கேட்டு வருகின்றனர். சில நடிகைகள் அதை கண்டு கொள்ளாமல் சென்றாலும் பலரும் இது போன்ற கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -