11 வது சீசன் ஐபில் போட்டிகளில் மைதானத்தில் அதிரடி சரவெடி கொண்டாட்டம் என்றால், பெவிலியனில் அணிக்கு ஆதரவாக கோஷம் போட்ட செலிபிரிட்டிகள் மற்றும் குடும்ப நபர்களினால் கிடைத்த என்டெர்டெய்ன்மெண்ட் வேறு ரகம் தான் .

சென்னை சூப்பர் கிங்ஸ்

மைதானத்தில் தோணி தலைமயில் சென்னை அணி ருத்ரதாண்டவம் ஆடுகிறதென்றால், காலரியில் இவர் மனைவி தலைமையில் இந்த அணிக்கு முழு சப்போர்ட் தருகிறது மகளிர் ஆர்மி. இதில் ரெய்னா, ஹர்பஜன், தாஹிர், வாட்சன் போன்றோரின் துணைவியாரும், மற்ற வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் அடங்கும்.

Malti-chahar-with-Mahendra-Singh-Dhoni
மாலதி சாஹர்

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் சகோதரி ஆவார். ஐபில் இல் நம் நெட்டிசன்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர். இந்த போட்டிகளுக்கு முன்பே பிரபலமான செலிபிரிட்டி தான். கடந்த 2014 இல் நடந்த மிஸ். இந்தியா போட்டியில் கலந்து கொண்டவர். அதில் மிஸ் சுடோக்கு பட்டம் வென்றவர். தற்பொழுது நடிகை மற்றும் விளம்பர பட மாடல்.

இவர் கிரிக்கெட் ப்ராக்டிஸ் செய்துள்ள வீடியோ இன்ஸ்டாக்ராமில் அதி வைரல் ஆகியுள்ளது. மேலும் இவர் ஸ்டேட்டஸ் ஆக நான் ப்ராக்டிஸில் ஈடுபட்டு ரொம்ப நாள் ஆகிறது, அதீத வெயில் அடிக்கிறது, அதீத வெயில் மற்றும் குளிரில் விளையாடும் வீரர்களுக்கு தலை வணங்குகிறேன், அதுமட்டுமன்றி லேதர் பால் வேறு என்றும் சொல்லியுள்ளார்.