Connect with us

Cinemapettai

மலேஷியா டு அம்னீஷியா விமர்சனம்! அட இது கமல் படம் பாதி மம்மூட்டி பட மீதியாச்சே

Reviews | விமர்சனங்கள்

மலேஷியா டு அம்னீஷியா விமர்சனம்! அட இது கமல் படம் பாதி மம்மூட்டி பட மீதியாச்சே

ராதாமோகன் இயக்கத்தில் வைபவ், எம் எஸ் பாஸ்கர், கருணாகரன், வாணி போஜன், சச்சு, மயிலசாமி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’  நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. பிரேம்ஜி இசையமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். பீல் குட் சினிமா எடுப்பதில் வித்தகர் ராதா மோகன், எனவே அதிக எதிர்பார்ப்புக்கு நடுவே வெளியான இப்படம் ரசிகர்களை கவருமா என வாங்க பார்க்கலாம்.

கதை  வைபவ் – வாணி போஜன் தம்பதி தங்கள் மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். வைபவ்க்கு பெங்களூரில் ரகசிய காதலி இருக்கிறாள். காதலியைப் பார்க்கச் செல்லும் வைபவ் மலேசியாவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். ஆனால், அந்த விமானம் கடலில் விழுந்து மாயகிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. திரும்பி வந்து தனக்கு பழசு மறந்துவிட்டது, என நண்பன் கருணாகருடன் சேர்ந்து மனைவியை ஏமாற்றுகிறான். வாணி போஜனின் மாமாவான எம்.எஸ். பாஸ்கர் என்ன நடந்தது என துப்பறிகிறார்.

மனைவியின் அன்பும் குழந்தையின் பாசமும் செய்த தவறை உணர்த்துகிறது. ஹீரோ திருந்துகிறான், காதலியிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்குகிறான். இது அனைத்தையும் தெரிந்துக்கொண்டு எம் எஸ் பாஸ்கர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதுடன் முடிகிறது படம்.

malasiya to amneshia movie

சினிமாபேட்டை அலசல் – கிரேஸி மோகன் நாடகத்தை போன்ற சிம்பிள் கதை. கதாபாத்திரங்களும் குறைவு தான். குறுகிய பட்ஜெட்டில் ஒரு சிம்பிள் சினிமா.  ராதாமோகனின் படங்களில் வசனத்தில் வரும் ஒன் லயன் நன்றாக இருக்கும், இப்படத்தில் அது மிஸ்ஸிங். வைபவும் சரி வாணி போஜனும் மாமா என கூப்பிட, இவர்களுக்கு எம் எஸ் பாஸ்கர் என்ன உறவு என்றே நமக்கு பெரிய குழப்பம் வருகிறது ஒரு நேரத்தில்.

சில பல இடங்களில் நம் பொறுமையை சோதிக்கத்தான் செய்கிறது. அதிலும் வைபவ் தன் காதலியுடன் போடும் ரோமன்ஸ் பாடல் எரிச்சலை தான் ஏற்படுத்தியது. டெய்லி சீரியல் அம்மணி போல வாணி போஜனை படத்தில் பயன்படுத்தியுள்ளது பெரிய ஏமாற்றத்தை  தந்துள்ளது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – சதிலீலாவதி பட ரமேஷ் கண்ணா – ஹீரா டெம்ப்லேட் தான் இப்படம். அதே சமயத்தில் மம்மூட்டியின் அழகன் படத்தில் விருந்தாளியாக  (அதாங்க நம்ம பிக் பாஸ் மொட்டை அங்கிள்) வந்து நோண்டி நுங்கெடுப்பாரே அந்த ரோலை எம் எஸ் பாஸ்கருக்கு கொடுத்து ஒரு காக்டயிலாக படத்தை கொடுத்துள்ளனர்.

கொஞ்சம் டைம்மிங் காமெடி  தூக்கலாக இருந்திருக்கும் பட்சத்தில் இப்படம் நிறைவாக இருந்திருக்கும். சற்றே ராதா மோகன் நம்மை ஏமாற்றிவிட்டார்.  (இப்படத்தில் ஏன் குமரவேல் மிஸ்ஸிங் என்பதும் தெரியவில்லை.)

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25 /5

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top