Videos | வீடியோக்கள்
மின்னலே வசீகரா ஸ்டைலில், சி வி குமாரின் ‘Gangs of மெட்ராஸ்’ பட ‘மாலை மலருதடா’ சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ வெளியானது.
திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
சி.வி.குமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனம். அட்டகத்தி, சூது கவ்வும், பீட்ஸா, முண்டாசுப்பட்டி போன்ற படங்கள் இவரின் நிறுவனத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. மாயவன் என்ற சைன்ஸ்-ஃபிக்ஷன் படத்தின் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தார். இவர் இயக்கும் அடுத்த படம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’. ஹரி தஃபுசியா இசை. கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், ராட் க்ரிஷ் எடிட்டிங்.

gangs of madras
இப்படத்தில் வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி , பகவதி பெருமாள். பிரியங்கா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

gangs of madras
இப்படத்தின் சிங்கிள் பாடல் லிரிகள் விடியோவை இன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார். இப்பாடலைனை முத்தமிழ் எழுத, ஜயோத்சனா ராதாகிருஷ்ணன் பாடியுள்ளார். இப்பாடல் இளசுகளிடம் நல்ல லைக்ஸ் பெற்று வருகின்றது.
