ஆரண்யகாண்டம் படத்தின் இயக்குனர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படம் ஆரம்பித்தார். இதற்க்கு அநீதிக் கதைகள் என்று பெயரும் வைக்கப் பட்டது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாஹத் பாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, நதியா என்று பலர் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  வெளியானது விஜய் சேதுபதி, சீனு ராமசாமி, யுவன், இளையராஜா இணையும் புதிய பட அறிவிப்பு. போட்டோ உள்ளே.

இன்று மாலை 5 மணியளவில் படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரையும், கெட்அப் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ள “சூப்பர் டீலக்ஸ்” என்பது தான் படத்தின் புது பெயராக இருக்குமோ? என்று குழப்பத்தில் உள்ளனர் ட்விட்டர் வாசிகள்.

 

அதிகம் படித்தவை:  யுவனுக்காக வரிசைகட்டி நிற்கும் புது இசையமைப்பாளர்கள்!

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: இந்த போஸ்டர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார் என்பதை உறுதி செய்து விட்டது .எனினும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் காத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.